நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு இழப்பீடு விவசாயிகள் கோரிக்கை

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு இழப்பீடு  விவசாயிகள் கோரிக்கை
X

மழையால்  சேதமடைந்த நெல் வயல்

அறுவடைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால்,விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம், கல்வெளி பொட்டலில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வளைய நேந்தல் கிராமத்துக்குள்பட்ட கல்வெளிப் பொட்டலில் சுமார் 150 ஹெக்டேருக்கும் மேல் நெல்பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், அறுவடைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், இந்த பகுதி விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!