வாழை இலை அறுத்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி
வாழை இலை அறுக்கச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்தில் மேலநெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர், விவசாயி ஆறுமுகம்(50). அவர் வியாபாரத்திற்காக இன்று அவரது வயலில் வாழை இலை அறுக்கச் சென்றார். அப்போது விவசாயி ஆறுமுகம் , தாழ்வாக சென்ற மின் வயரில் கை உரசியது. அதனால், அவருக்கு மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரிய பணியாளர்களின் அலட்சியமே விவசாயி சாவுக்கு காரணம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu