தமிழர் நாகரிகத்தின் ஊற்றுக்கண் கீழடி அகழாய்வு கூடம்: குவியும் சுற்றுலாபயணிகள்
கீழடி அகழாய்வு தளம்
தமிழர் நாகரிகத்தில் ஊற்றுக் கண்ணாகத்திகழும் கீழடி அகழாய்வு கூடம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சுற்றுலா தினமாக கொண்டாடப்படும் நிலையில், கீழடி அகழாய்வு நடக்கும் பகுதியில் தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பாக விழா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பல இடங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர் என்று சிறப்பு நிகழ்ச்சிகளாக தமிழக பாரம்பரிய கரகாட்டம் மயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு சில பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu