தொடர் முகூர்த்தம் எதிரொலி: சிவகங்கை பகுதியில் வாழை விற்பனை அதிகரிப்பு
பைல் படம்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் முகூர்த்தம் எதிரொலியாக வாழை மரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சிவகங்கை, மதகுபட்டி, மலம்பட்டி, கலியாந்தூர், நயினார் பேட்டை, திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது.
டிசம்பர் எட்டு, ஒன்பது, பத்து, 13 என தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் வாழை மரம் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு ஜோடி மரம் 200 ரூபா யில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. திருப்புவனம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாழை மரங்களை மொத்தமாக வாங்கிச் செல்வதால் இப்பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது.
இப்பகுதிகளில் முப்பட்டைரக வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. தொடர் மழையால் வாழைக்காய், பழம், இலை ஆகியவற்றின் விலை பெரும்ளவு சரிந்து விட்ட நிலையில், தற்போது வாழை மரங்கள் விற்பனை கைகொடுத்து வருகிறது. கார்த்திகையை தொடர்ந்து தை, மார்கழி என அடுத்தடுத்த மாதங்களில் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்தாலும் 800 கன்றுகள்தான் விளைச்சலுக்கு வரும். ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தாலும் போதிய அளவு வருவாய் கிட்டவில்லை. பல்வேறு பகுதிகளில் விளைச்சல் அதிகரித்ததால் விலைசரிந்து விட்டது என்றார்.
மேலும் மதுரை மார்க்கெட்டில் திருப்புவனம் பகுதி வாழை மரங்கள், இலைகளுக்கு தனி மவுசு உள்ளது. திருப்புவனம் பகுதி வாழைகள் பத்து நாட்கள் வரை வாடாது என்பதால் பலரும் விரும் புவார்கள். இதனால் விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி மதுரை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu