திருப்புவனம் சுயேட்சைக்கு ஒட்டு கேட்ட திமுக நிர்வாகி: மேளதாளத்துடன் வரவேற்பு

திருப்புவனம்  சுயேட்சைக்கு ஒட்டு கேட்ட திமுக நிர்வாகி: மேளதாளத்துடன் வரவேற்பு
X

 திருப்புவனத்தில் சுயேட்சைக்கு ஒட்டு கேட்டு வந்த திமுக மாவட்ட துணை செயலாளருக்கு சிவப்பு கம்பளம் விரித்து மேள தாளம் முழங்க மாலை தூவி வரவேற்ற வார்டு மக்கள்

மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் போட்டியிடுகிறது இதில் 7 வது வார்டில் ரபிக் சுயேட்சையாக போட்டியிடுகிறார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சுயேட்சைக்கு ஒட்டு கேட்டு வந்த திமுக மாவட்ட துணை செயலாளருக்கு சிவப்பு கம்பளம் விரித்து மேள தாளங்கள் வாசித்து மாலை தூவி வரவேற்ற வார்டு மக்கள் திமுக மாவட்ட துணை செயலாளரையும் வேட்பாளரையும் வியக்கவைத்தனர்.

ஒட்டு கேட்டு வந்த திமுக மாவட்ட செயலாளரையும் வேட்பாளரையும் மலர் துவி மேள தாளம் முழங்க அதிகாலையிலே வரவேற்றதால், இருவரும் வியந்து போயினர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியின் 18வார்டுகளில் திமுகவினர் தனித்து 16வார்டுகளில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர் இதில் 7வது வார்டு பகுதியின் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ரபிக் என்பவர் போட்டியியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஒட்டு சேகரிக்க வந்த திமுக மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து மேல் தாளத்துடன், இருபக்கமும் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்ததால் வேட்பாளர் ரபிக் ,மாவட்ட துனை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் வியப்படைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!