ஒன்றியக்கவுன்சில் கூட்டம்: அதிமுக சேர்மனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் தர்னா

ஒன்றியக்கவுன்சில் கூட்டம்: அதிமுக சேர்மனை எதிர்த்து  அதிமுக  கவுன்சிலர்  தர்னா
X

இளையான்குடியில் நடைபெற்ற ஒன்றியக்குழுக்கூட்டத்தில் தலைவரை எதிர்த்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் சண்முகம் 

அதிமுக உறுப்பினரின் தர்னா போராட்டம், தலைவர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இளையாங்குடி ஒன்றியக்கவுன்சில் கூட்டத்தில் அதிமுக சேர்மன் மன்னர் போல் செயல்படுவதாக கூறி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் இளையான்குடி ஒன்றியக்குழுத் தலைவர் அதிமுகவை சேர்ந்த முனியாண்டி தலைமையில் நடந்தது.

ஒன்றியக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அண்டகுடி ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் சண்முகம் என்பவர் வரவு -செலவு கணக்குகளில் மோசடி நடந்திருப்பதாகவும் எந்த ஒரு திட்டங்கள் குறித்து தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும் தன்னிச்சையாக செயல்படுவதாக மன்னர் போல செயல்படுவதாக புகார் கூறி ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுவில் சரியாக அதிமுக கவுன்சிலர் 8 பேர் மற்றும் ,திமுக கவுன்சிலர் சரியாக 8 பேர் என 16 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், தற்போது ஒரு அதிமுக கவுன்சிலர் தனது கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவரை எதிர்த்து, ஒன்றியகுழு கூட்டத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், தலைவர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்