திருப்புவனத்தில் வைகை ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்புவனத்தில் வைகை ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
நேற்று முன்தினம் பிற்பகல் வைகை ஆற்றில் குளிக்கச்சென்றவர் வீடுதிரும்பவில்லை. போலீஸார் தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்

திருப்புவனத்தில் வைகை ஆற்றில் குளித்தவர் மூழ்கி உயிரிழப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாமல் வறண்டு கிடந்த வைகை ஆற்றில் கடந்த சில மாதங்களாக தொடர் மழையால் மாவட்டம் முழுவதிலும் அதிக அளவு மழை பெய்து வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் ஆற்றுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவித்து. மேலும் இளைஞர்கள் குழந்தைகள், பெரியவர்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.புதூரைச் சேர்ந்தவர் சேதுராமன் (60). இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் வைகை ஆற்றில் குளிக்க சென்றார்.நீண்டநேரமாகியும் வராததை அடுத்து, அவரது மனைவி செல்வி அளித்த புகாரின்பேரில், போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஆற்றுக்குள் தேடி பார்த்தனர். இரவு ஆனதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று பகலில் ஆற்று தண்ணீருக்குள் இறந்த நிலையில் சேதுராமன் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!