கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால் அவலம்

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள்  மூழ்கின - தூர்வாராததால் அவலம்
X

மானாமதுரை அருகே, கட்டிகுளம் கண்மாய் கால்வாய் தூர்வாராததால், கண்மாய் நிரம்பி 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிகுளம் கண்மாய், கால்வாய் ஆகியன சரியாக தூர்வாராததால் கண்மாய் நிரம்பி பெரும்பச்சேரி கிராமத்தில் போடபட்டிருந்த நெல், கரும்பு, வாழை ஆகிய 300ஏக்கர்க்கு மேல் பயிர்கள், ஆள் மட்டத்த்திற்கு நீரில் முழ்கியது. மேலும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கியதால், அவற்றை விவசாயிகள் மீட்டனர

இது கூறித்து, பெரும்மாச்சேரி விவவாயி மோகன் கூறுகையில், கண்மாய், கால்வாய் ஆகியவற்றை முறையாக தூர்வாரவில்லை. வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதிலே ஆர்வம் காட்டினர். கண்மாய், கால்வாயை தூர்வாருவதில் அக்கறை காட்டவில்லை. இதனால் கண்மாய் நிரம்பி விவசாயம் அனைத்தும் மூழ்கிவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!