சிவகங்கை மாவட்டம் - கானுர் கிராமம் கொரொனா இல்லாத கிராமமாக திகழ்கிறது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கானுர் கிராமம் கொரொனா இல்லாத கிராமமாக திகழ்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கானுர் கிராமத்து இளைஞர்கள் உண்மை உழைப்பு உயர்வு என விளையாட்டாக ஆரம்பித்த வாட்சப் குழுவின் மூலம் தங்கள் கிராமத்திற்க்கு தேவையான அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளையும் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி திட்டம் தீட்டி செய்படுத்தி வருகின்றனர்.
கொரொனா முதல் அலையின் போதும் மிகத்தெளிவாக செயல்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடாதபடி கிராமத்து இளைஞர்கள் பார்த்து கொண்டனர்.அதே போன்று இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள இந்த நிலையில் கிராமத்தில் யாருக்கும் கொரொனா நொய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று
கண்ணும் கருத்துமாக இருந்து கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை எந்த வகையான உணவுகளின் மூலம் அதிகப்படுத்தலாம் என்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தினமும் கானுர் கிராம மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் முளைகட்டிய பயிறு வகைகள் வேர் கடலை என பெரியவர் முதல் சிறியவர்கள் வகை அனைத்து வயதினர்க்கும் உண்மை உழைப்பு உயர்வு குழுவினர் சக்தி மிகுந்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
சத்தான உணவின் மூலம் கிராம மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரொனா இல்லாத கிராமமாக கானுர் கிராமம் திகழ முக்கிய காரணமாக சோமசுந்தரம் என்பவர் இருக்கின்றார்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu