பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேருந்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேருந்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டம்
X
பெட்ரோல், டீசல்- விலை உயர்வை கண்டித்து- காங்கிரஸ் கட்சியினர்- பேருந்தை கயிறு கட்டி -இழுத்துச் சென்று- ஆர்ப்பாட்டம்.

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை பேருந்தை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் இவற்றின் விலைகளை குறைக்க வலியுறுத்திம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார் .

காங்கிரஸ் எஸ்.சி பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏ.சி. சஞ்சய், வட்டாரத் தலைவர் கரு.கணேசன், நகர்த் தலைவர் எம்.கணேசன், மாவட்ட இணைச் செயலாளர்கள் மகாலிங்கன், காசிராஜன், காசி, புருஷோத்தமன், பிரேமச்சந்திரன், வழக்குரைஞர் எம்.முத்துக்குமார்,

ஊடகப்பிரிவு பால் நல்ல துரை, எஸ்.ஆர்.இ.எஸ். ரயில்வே தொழிற் சங்க மத்திய ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.ராஜாராம், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், திருப்புவனம் நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி செந்தாமரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியினர் பேருந்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ai solutions for small business