அரசுப் பேருந்தில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துனர்

அரசுப் பேருந்தில்  தவறவிட்ட  நகையை  உரியவரிடம்  ஒப்படைத்த  நடத்துனர்
X

 மானாமதுரை பேருந்து நிலையத்தில் வைத்து நடத்துனர் பாபு, அந்த நகையை கோபிநாத்திடம் ஒப்படைத்தார்

நடத்துனர் பாபு அந்த நகையை கோபிநாத்திடம் ஒப்படைத்ததை சக பயணிகள் நடத்துனர் பாராட்டினர்

பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் கோபி நாத் நேற்று காலை இராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார் . அப்போது அவர் கையில் அணிந்திருந்த கைச்செயின் தவறி விழுந்தது. தொலைந்து போனது தெரியாமல் வீட்டில் அந்த நகையை தேடி உள்ளார். வீட்டில் கிடைகாததால், தான் வந்த பேருந்தில் தவற விட்டு இருக்காலம் என்று நேற்று மாலை இராமனாதபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை காண்பித்து பேருந்தில் தனது நகை தவறி கீழே விழுந்திருக்கலாம் கூறி உள்ளார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து உடனடியாக அந்த பேருந்து ஓட்டுனர் நடத்துனர் தகவல் தெரிவித்தார். இரவு பணி முடிந்து வழக்கம் போல் பேருந்துதை சோதனை செய்வது வழக்கம். அதன்படி பேருந்தை மானாமதுரையை சேர்ந்த நடத்துனர் பாபு சோதனை செய்யும் போது பொருட்கள் வைக்கும் இடத்தில் நகை இருந்து உள்ளது அதனை எடுத்து. சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து மானாமதுரை பேருந்து நிலையத்தில் வைத்து நடத்துனர் பாபு, அந்த நகையை கோபிநாத்திடம் ஒப்படைத்தார் சக பயணிகள் நடத்துனர் பாபுவை பாராட்டினார்

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!