மானாமதுரை அருகே பெட்ரோல் பங்கில் ஆயில் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்

மானாமதுரை அருகே பெட்ரோல் பங்கில் ஆயில்  கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்
X

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே யுள்ள பெட்ரோல் பங்கில் கூடுதல் விலைக்கு என்ஜின் ஆயில் விற்பனை செய்வதாக லாரி உரிமையாளர் புகார் தெரிவித்தார்.

ஆயில் உள்ள டப்பாவில் எம்.ஆர்.பி., விலையைவிட கூடுதலாக ரூ. 500- ஐ அங்குள்ள விற்பனையாளர்கள் கேட்கின்றனர்

மானாமதுரை அருகே சங்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் ஆயிலுக்கு நிர்ணயம் செய்த விற்பனை விலையை விட கூடுதல் விலை கேட்பதாக லாரி உரிமையாளர் புகார் தெரிவித்தார்.

மானாமதுரை அருகே உள்ள வளநாடு கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்கர் கணேஷ்(34,) இவர் சங்கமங்கலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு லாரிக்கு தேவையான ஆயிலை வாங்கியபோது அதில் உள்ள எம்.ஆர்.பி., விலையை விட ரூ.500 கூடுதலாக விற்பனையாளர்கள் கேட்பதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், லாரிக்கு தேவையான ஆயில் வாங்கச் சென்றபோதுஆயில் உள்ள டப்பாவில் எம்.ஆர்.பி., விலையைவிட ரூ. 500ஐ அங்குள்ள விற்பனையாளர்கள் கூடுதலாக கேட்கின்றனர், இது குறித்து அவர்களிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என அடாவடியாக பேசுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!