ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழாவும் களைகட்டும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் மானாமதுரையில் நடைபெறும். விழாவின் நிறைவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவது மிக சிறப்பாக நடைபெறும்.

இப்படிப்பட்ட உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.ஒவ்வொரு மண்டகப்படி தாரர் நடத்தும் பத்துநாள் நிகழ்ச்சியும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!