கீழடியில் 8 ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடக்கம்
கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்டோர்
கீழடியில் 8 ம் கட்ட அகலாய்வு பணியினை முதல்வர் ஸ்டாலின் கானொளி காட்சி மூலம் துவக்கிவைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 8ம் கட்ட அகழ்வாய்வுப் பணியினை சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்ரமணியம் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழகத்தின் கலாசாரத்தை மென்மேலும் எடுத்துச் செல்லும் வகையில் நடைபெறும். அகழ்வாய்வு பணிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2 கோடி ஒதுக்கி உள்ள நிலையில், தற்போது 5 கோடியினை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். தேவைக்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். தமிழர்களின் பழைமையான கலாசாரத்தை உலகறியச் செய்ய என்னென்ன நடவடிக்கை தேவையோ அனைத்தையும் முதல்வர் செய்ய உள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அருங்காட்சிய பணி நிறைவு பெற உள்ளதாகவும் விரைவில் திறக்கப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu