பாஜகவை சீண்டினால் கோயில்களில் மத்திய அரசு தலையிடும்: ஹெச்.ராஜா
மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பாஜக சார்பில் நடந்த கபடி போட்டியில் வென்றவர்களுக்கு கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு அனுமதித்தால் இந்து வழிபாட்டுதலங்களை திறப்பதாக தமிழக அரசு கூறுகிறது. மற்ற மத வழிப்பாட்டுதலங்களை மட்டும் திறக்க என்ன? மத்திய அரசிடம் அனுமதியா வாங்கினார்கள். மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வந்தவர்களை போலீஸார் அடித்து விரட்டியுள்ளனர்.
தமிழக அரசு, இந்து விரோத அரசாக உள்ளது. தமிழக பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்து விரோதியாக முதல்வராக உள்ளார். இந்து விரோத செயல்களை வேரோடு வெட்ட பாஜக முயற்சித்து வருகிறது. இது ஆன்மிகத்திற்கும், இந்து விரோதத்திற்கும் இடையேயான யுத்தம்.
அறங்காவலர் குழு இல்லாத கோயில்களில் காவலாளி கூட நியமிக்க முதல்வருக்கோ, அறநிலையத்துறை அமைச்சருக்கோ அதிகாரம் இல்லை. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிந்தநிலையில் உள்ளன. அவற்றை அறநிலையத்துறை எடுத்து சீரமைக்கவில்லை.
ஆனால் அறநிலையத்துறை நல்ல நிலையில் உள்ள கோயில்களை எடுத்து அழிக்க நினைக்கிறது. குயின்ஸ் லேண்ட் மீட்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி. கோயில்கள், அறக்கட்டளைகள் பொதுபட்டியலில் உள்ளன. பாஜகவை சீண்டினால் அவற்றில் மத்திய அரசை தலையிடும், என்றார். பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu