அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி: 3 பெண்கள் கைது

அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி: 3 பெண்கள் கைது
X

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற செல்வி, சாந்தி, மாரி.

அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த மூன்று பெண்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பு.

அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த மூன்று பெண்மணிகளை நடத்துனர் மற்றும் பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அம்முகுடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி இவர் இளையாங்குடி வருவதற்காக பரமக்குடியில் இருந்து தாயமங்கலம் வழி செல்லும் அரசு பேருந்தில் வந்துள்ளார்.

இவரைப் பின்தொடர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்த செல்வி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளான‌ சாந்தி மற்றும் மாரி உட்பட மூன்று பெண்களும் மூதாட்டி வந்த பேருந்தில் கூடவே பின்தொடர்ந்தது வந்துள்ளனர். இளையாங்குடி பேருந்து நிலையத்தில் மூதாட்டி இறங்கும் போது பின் தொடர்ந்து வந்த மூன்று பெண்மணிகளும் மூதாட்டி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க செயினை திருட முயற்சித்துள்ளனர்.

பேருந்தில் வந்த நடத்துனர் அதை பார்கவே அந்தப் பெண்கள் மூன்று பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து இளையாங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் அரசு நகர பேருந்தில் மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த பெண்மணிகளே பின்புலம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!