கால்வாயில் மூழ்கிய காரில் சிக்கியவர்களை மீட்ட ஓட்டுனருக்கு அண்ணாபதக்கம்

கால்வாயில் மூழ்கிய காரில் சிக்கியவர்களை மீட்ட  ஓட்டுனருக்கு அண்ணாபதக்கம்
X

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன்

கால்வாயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனுக்கு அண்ணாபதக்கம் ரூ. 1 லட்சம் பரிசளித்தார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மாரநாடு கால்வாயில் மூழ்கிய காரில் சிக்கியவர்களை மீட்ட திருப்புவனம் வடகரையை சேர்ந்த டிரைவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மதுரை இராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் கடந்த நவம்பர் மாதம் 8 -ஆம் தேதி மானாமதுரை பகுதியில் வசிக்கும் கணவர், மனைவி, 2 குழந்தைகள், ஒரு முதியவர் என 5 பேர் காரில் மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்புவனம் அடுத்த லாடனேந்தல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாரநாடு கால்வாய்க்குள் விழுந்தது. 6 அடி ஆழம் இருந்த அந்த கால்வாயில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் கால்வாயில் கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து, உடனடியாக தனது காரை நிறுத்திவிட்டு, தண்ணீரில் நீந்தி சென்று காருக்குள் தவித்துக் கொண்டிருந்த 5 பேரையும் ஒவ்வொருவராக காப்பாற்றினார்.

இந்நிலையில், குடியரசுத்தினத்தையொட்டி, வீரதீரச்செயலுக்கான அண்ணாபதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது கால்வாயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனுக்கு வீரதீரச்செயலுக்கான அண்ணா பதக்கதை முதல்வர் வழங்கினார்.அத்துடன், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!