மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே வாக்குவாதம்

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே வாக்குவாதம்
X

மானாமதுரையில் நடந்த ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக- திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக- திமுக இடையே வாக்குவாதம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜகம்பீரம் பகுதியே சேர்ந்த 7-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ருக்மணி, தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு தரவில்லை என்று போன கவுன்சிலர் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று மாதம் ஆகியும் இன்று வரை இணைப்பு தரவில்லை.

அதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார் என்று ஜி இன்று நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் குற்றம் சாட்டினர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்ப்புறம் இருந்த திமுக கவுன்சிலர் அண்ணாதுரை பேப்பரில் எழுதிக் கொண்டு வந்தால் புகாராக எடுத்துக் கொள்ள மாட்டாது சரியான ஆதாரம் வேண்டும் கூறினார். இதனால் இரண்டு கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படவே ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றவே உங்க திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்துவிட்டதால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் எங்களுக்கும் ஒரு காலம் வரும் என்று கூறினார்.

இதற்கு பதில் கூறிய திமுக கவுன்சிலர் அண்ணாத்துரை எங்க ஆட்சி வந்த 8 மாத காலத்திற்கு உங்களால் பொறுக்க முடியவில்லை உங்களுக்கு காலம் வரும்போது நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் முடியும் வரை வாக்குவாதத்தினால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!