ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
X

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து, மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றின் ஆகாயத் தாமரை செடிக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மூதாட்டியை பத்திரமாக மீட்ட, தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!