செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் மீட்பு

செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் மீட்பு
செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் மீட்பு. சிவகங்கை கோட்டாட்சியர் நடவடிக்கை

மானாமதுரை அருகே கல்குறிச்சியில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் மீட்பு. சிவகங்கை கோட்டாட்சியர் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கையா, காளீஸ்வரி மற்றும் இவர்களின் நான்கு குழந்தைகளுடன் கொத்தடிமை தொழிலாளர்களாக இருப்பதாக புகார் வந்ததை தெடர்ந்து வருவாய் கோட்டாச்சியர் முத்துகழுவன் தலைமையில் விசாரணை செய்து கொத்தடிமைகள் 6 பேரையும் இன்று மீட்கபட்டனர்.

மானாமதுரை , தீத்தான்குளம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.50,000 /- பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கையா, காளீஸ்வரி தம்பதியினர் பெற்ற கடனை அடைப்பதற்காக மானாமதுரை அருகே கல்குறிச்சியில் செங்கல் சூளையில் 6 மாதமாக வேலையில் அமர்த்தபட்டுள்ளனர் கொரோனா காரணமாக வேலை இல்லாததால் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காந்தி என்பவரிடம் 50,000 பணம் பெற்று கொண்டு அந்த குடும்பத்தை கொத்தடிமையாக நெடுங்குளத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கும் சரியான

வேலை ஏதும் இல்லாத நிலையில் காந்தி தனது உறவினர் சுப்பிரமணியிடம் சங்கையா காளீஸ்வரியின் மூத்த மகன் குகன்ராஜ் (11) ஆடு மேய்க்க பணம் பெற்று கொண்டு அனுப்பியுள்ளார்..

கொத்தடிமையாக செங்கல் சூளைக்கு சென்றதும் காந்தி என்பவர் சலவைத் தொழில் செய்வதற்கு பணம் கொடுத்து வேலைக்கு அழைத்து சென்றதும் சுப்பிரமணி என்பவர் ஒரு மகனை ஆடு மேய்க்க வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்து இன்னு தாய் தந்தை 4 குழந்தைகள் என 6 பேர் மீட்கபட்டுள்ளனர் மேலும் அவர்களுக்கு இலவச வீட்டுமனை, 1 மாத காலத்திற்கு தேவையான அரிசி பல சரக்கு பொருட்கள் நிதி உதவி 40,000 /- மற்றும் சலவை பெட்டி வழங்கபட்டது.

இதில் தொடர்புடைய காந்தி சுப்பிரமணி கைது செய்யபட்டு மேலும் குணசேகரனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story