இளையான்குடி அருகே வாகன சோதனையில் 50 மூடை ரேசன் அரிசி வாகனங்கள் பறிமுதல்

இளையான்குடி அருகே வாகன சோதனையில் 50 மூடை ரேசன் அரிசி வாகனங்கள் பறிமுதல்
X

இளையான்குடி அருகே  விரட்டிப்பிடித்த அரிசி கடத்திய வாகனத்துடன் போக்குவரத்து போலீஸார்

மயிரிழையில் உயிர் தப்பிய போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்

இளையான்குடி அருகே வாகன சோதனையின் போது காவலர்கள் மீது மோத முயன்ற, வேனை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார். 50 மூடை ரேசன் அரிசி, வேன் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே குமாரக்குறிச்சியில் போக்குவரத்துக் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமக்குடியில் இருந்து வந்த வேனை நிறுத்த முயன்றனர். வேன் ஒட்டுநர் நிற்காமல் காவலர்கள் மீது மோத முயன்றதில் போக்குவரத்து ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் தலைமை காவலர் கோட்டைசாமி மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட போலீசார் தப்பி சென்ற வாகனத்தை சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்.
அதனை ஆய்வு செய்த போலீசார் அதில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டறிந்தனர். ரேசன் அரிசி கடத்த துணையாக சென்ற இரு சக்கர வாகனம், வேன் மற்றும் 50 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நான்கு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ரேசன் அரிசி கடத்த முயன்ற வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திப் பிடித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story