இரவில் கொடூர தாக்குதலுடன் வழிப்பறி செய்யும் டீனேஜ்கள்..! அதிர்ச்சியில் மக்கள்: 10 பேர் கைது
மானாமதுரையில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் கணேஷன், இவர் மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் வீடு திரும்பும் போது, மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணேஷிடம் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்ததால் கணேஷின் தலை, முகம் ஆகிய பகுதியில் கொடூரமாக வெட்டி உள்ளனர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் இருவரும் பயந்து தப்பி ஓடிவிட்டனர். வலிதாங்க முடியாமல் கணேஷ் தனது செல்போன் மற்றும் பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து உயிர் தப்பித்து பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இத்தனை அடுத்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் பலத்த காயமடைந்த கணேஷை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி சுந்தர மாணிக்கம் தலைமையில் இரவில் உடனடியாக தனிபடை அமைத்த குற்றபிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது குற்றவாளிகள் ரயில்வே காலனி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மானாமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கிளங்காட்டுர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அமர்நாத் வயது17, ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் 21, ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ரவி மகன் நாணி 17, ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சபரி 18, ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் மீனாட்சி சுந்தரேஸ்வரன் 17, பார்திபனுர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரவின் 21, பரமக்குடியை சேர்ந்த பாண்டி மகன் ராஜா 21, மதுரையை சேர்ந்த ராஜ் மகன் அருள் ராஜ் 19, பரமக்குடியை சேர்ந்த அமீர் அப்துல் மகன் முகமது கலில் 17, பரமக்குடியை சேர்ந்த வேலு மகன் அஜித் 22, ஆகியோர் சேர்ந்து வைகை ஆற்று பலத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அஜித் மற்றும் பிரவின் ஆகியோர் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நிலுவையில் உள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி மிகவும் கண்காணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. கொலை, கொள்ளை சம்பவங்கள் கூடுதலாக நடைபெறும் பகுதி என காவல்துறையினர் எப்போதும் தீரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரையில் நடைபெற்ற குற்றத்தில் விசாரணையை விரைவுபடுத்தி சில மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறையை அனைவரும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu