நிமோனியா நோயால் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு ஆட்சியர் நேரில் ஆய்வு

நிமோனியா நோயால் ஆடுகள் உயிரிழப்பு

மானாமதுரை அருகே நிமோனியா நோயால் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மானங்காத்தான் புலிக்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கால்நடை வளர்த்தல் தொழில் பிரதான தொழிலாக அந்த கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

புலிக்குளம் என்றால் ஜல்லிக்கட்டு காளைக்குபேர் போன கிராமம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இங்கிருந்துதான் காளை கன்றுகளை வாங்கிச்சென்று வளர்த்து வருகின்றனர்.

கால்நடை தொழிலை நம்பி இருந்து வரும் இந்த கிராமத்தில் வளர்த்த ஆடுகளை திடீரென நிமோனியா நோய் தாக்கியது. அதனால் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததால் கிராமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து தகவறிந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி நேரில் ஆய்வு செய்து அந்த கிராமத்தில் மருத்துவக் குழுக்களை முகாமிட்டு நோயை குணப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business