கீழடியில் தோண்டத் தோண்ட வெளிவரும் பழங்கால தமிழர்களின் ரகசியம்

தோண்டத் தோண்ட வெளிவரும் பழங்கால தமிழர்களின் ரகசியம்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ள உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய கீழடி கிராமம் அமைந்துள்ளது இவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் நாகரீகத்தை வெளிக் காட்டி வருகிறது

கீழடி ,கொந்தகை ,மணலூர் ஆகிய கிராமங்களில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது

ஆறு கட்டங்களாக நடைபெற்று முடிந்த அகழாய்வு தற்போது ஏழாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை கீழடி கிராமத்தில் அருங்காட்சியகம் அமைத்து அதில் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது

கீழடியில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள ஆட்டக்காய்கள், சில்லு வட்டுக்கள் ,சுடுமண் சக்கரம், மண்ணால் செய்யப்பட்ட எடைக்கல்,சுடுமண் காதணி ஆபரணம், பகடைக்காய் தக்களி சொப்பு பாத்திரம் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் சுடுமண் முத்திரை சூதுபவள மணிகள் இரும்பாலான ஆணிகள் தங்க ஆபரணம் இரும்பாலான கத்தி வழுவழுப்பான கற்கோடாரி போன்ற பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மனிதர்களின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது 5 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் தோண்டத் தோண்ட வெளிவரும் பழங்கால தமிழர்களின் ரகசியம் இதன்காரணமாக கீழடி அகழாய்வு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது

Next Story