ஏனாதி கிராமத்தில் பறந்து வரும் பஞ்சுகளால் சுவாச பிரச்சனை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
ஏனாதி கிராமத்தில் காற்றில் பறந்து வரும் நானல் பஞ்சால் சுவாச பிரச்சனை. அரசு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அமைந்துள்ளது ஏனாதி கிராமம். இங்கு சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த சுமார் 150 பேர் வசித்து வருகின்றனர். கொரானா ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்துள்ள இவர்கள் முகக்கவசத்தை நாள் முழுவதும் அணிந்து வருகின்றனர்.
இக்கிராமத்தை சுற்றி குளங்களில் வளர்ந்துள்ள ஆள் உயரத்திற்கும் மேலே நாணல் புள்கள் பூத்துள்ளது. தற்போது கோடை வெயிலில் காய்ந்த நாணல் பூக்களில் இருந்து வரும் பஞ்சு காற்றில் பறந்து இக்கிராமத்திற்கு வந்து தண்ணீர், உணவுகளிலும் படர்கின்றது. மேலும் இதனை சுவாசிப்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாச பிரச்சனை ஏற்படுவதாக இக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கிராம பஞ்சாயத்து, வட்டாச்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே காற்றில் பறந்து வரும் நாணல் பஞ்சால் பாதிக்கப்படும் இக்கிராம மக்களை காத்திட நாணல் பூட்களை அகற்ற வேண்டும் என அரசிற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu