ஜாமீன் கையெழுத்திட்டு வந்த வாலிபர் வெட்டிக்கொலை

ஜாமீன் கையெழுத்திட்டு வந்த வாலிபர் வெட்டிக்கொலை
X

காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பயணியர் விடுதி எதிரே உள்ள சந்தில் வசித்து வரும், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் அக்னிராஜ் (23).பழைய வழக்கு ஒன்றில் மானாமதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மானாமதுரை காவல்நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

அதே போல் இன்று காலை மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு பைக்கில் வரும்பொழுது காவல் நிலையம் அருகில் அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் ஒன்று அக்னிராஜை வெட்டியதில் அவர் உயிரிழந்தார் . இது தொடர்பாக தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 9 ம் தேதி இரவு நீதிமன்ற வாசலில் வைத்து இருவர் வெட்டப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்பதாவது குற்றவாளியாக அக்னிராஜ் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். இதில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் அக்னிராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!