காரைக்குடியில் மாணவிகளின் முன் சாகசம் செய்து விழுந்த இளைஞர்கள்: போலீசார் வலை

காரைக்குடியில் மாணவிகளின் முன் சாகசம் செய்து விழுந்த இளைஞர்கள்: போலீசார் வலை
X

பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்கள்.

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் நேற்று இரு இளைஞர்கள் தங்களது (டியூக்) சொகுசு இருசக்கர வாகனத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும்போது சாகசத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி கல்லூரி சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பின்னர் கோட்டையூர் பகுதிக்குச் சென்று அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் முன்பு சாகசம் செய்து கீழே விழுந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக கீழே விழும்போது பேருந்துக்கு காத்திருந்த மாணவிகளுக்கு பயணிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த இளைஞர்கள் குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் காவல்துறையினரும் பள்ளத்தூர் காவல்துறையினரும் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபோல் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பைக் சாகசங்கள் குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!