மானகிரியில் இளைஞர்களின் மாட்டு வண்டி பந்தயம்: 22 ஜோடி மாடுகள் பங்கேற்பு

மானகிரியில் இளைஞர்களின் மாட்டு வண்டி பந்தயம்: 22 ஜோடி மாடுகள் பங்கேற்பு
X

பந்தயத்தில் சீறிப்பாயும் மாடுகள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 22 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. சின்னமாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மாட்டிற்கு 8 கிலோமீட்டரும், சின்ன மாட்டிற்கு 6 கிலோ மீட்டரும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாடு, சின்னமாடு இரண்டிலும் தேனி மாவட்ட மாடுகள் முதலாவதாக வந்து பரிசினை தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டிபந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்று கண்டு ரசித்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்