பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த வாலிபர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு வந்த நடனமாடும் இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு நடன ஏற்பாட்டாளர் ராஜா என்பவர் அழைத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த யாசினி சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையில் 4 குழுக்கள் அமைத்து புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர். இன்று ராஜாவை காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
குற்றவாளி ராஜாவை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் உசிலம்பட்டி சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சாக்கோட்டை போலீசார் ராஜாவை உசிலம்பட்டி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu