காதல் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை; தம்பதியரின் சோக முடிவு

காதல் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை; தம்பதியரின் சோக முடிவு
X

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்.

காதல் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரில் வசித்து வருபவர் லாரி உரிமையாளர் சீனிவாசன். இவரது இளைய மகன் செல்வ முத்துக்குமார் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். செல்வமுத்துக்குமாரும் அவரது உறவுக்காரப் பெண் நித்யாவும் 8 ஆண்டுகளாக காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்துடன் இருந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த செல்வம் முத்துக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது மனைவி நித்தியாவும் வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் காதல் கைகூடிய தம்பதியினர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!