காரைக்குடியில் அரிக்கேன் விளக்கு மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பு

காரைக்குடியில் அரிக்கேன் விளக்கு  மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பு
X

காரைக்குடி நகராட்சி வார்டில் சுயேட்சை வேட்பாளர் தனது சின்னத்தை சுமந்து வாக்கு சேகரித்தார்

தனக்கு ஒதுக்கப்பட்ட அரிக்கேன் விளக்குகளையே மாலையாக போட்டுக்கொண்டு வித்தியாசமான முறையில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்

காரைக்குடியில் அரிக்கேன் விளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சின்னத்தையே மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பு.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். .இதில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் ஆறுமுகம் என்பவர், ஏற்கெனவே 2001, 2011 ஆண்டுகளில் காரைக்குடி நகர்மன்ற 8 வது வார்டு உறுப்பினருக்கு சுயேச்சையாக போட்டியிட்டு, இரண்டு முறையும் வெற்றி பெற்றவர். தற்போது 15வது வார்டில் போட்டியிடும் இவருக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் தனிநபராக தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்.. தனக்கு ஒதுக்கப்பட்ட அரிக்கேன் விளக்குகளையே மாலையாக போட்டுக்கொண்டு வித்தியாசமான முறையில் வீடு, வீடாக தனிநபராக சென்று வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்..


Tags

Next Story
what can we expect from ai in the future