சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை நீர்நிலைகளில் மீன்பிடிக்க இறங்கிய கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை நீர்நிலைகளில் மீன்பிடிக்க  இறங்கிய கிராம மக்கள்
X

சிவகங்கை மாலட்டம், காரைக்குடி அருகே கல்லல் கிராமத்தில் கண்மாயில் மீன் பிடித்த  பொதுமக்கள்

மீன் வகைகள் வலையில் சிக்கிதால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கால்வாய்களில் நீர்வரத்து அதிகமானதால் மீன்பிடிக்க கிராமக்கள் களத்தில் இறங்கி மீன்களை பிடித்துச் சென்றனர்.

தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கண்மாய்கள் நீர்நிலைகள் நிறைந்து,வரத்துக் கால்வாய் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செவரக்கோட்டை கண்மாய் நிரம்பி வரத்துக் கால்வாய் வழியாக உபரி நீர் வெளியேறிச்செல்கிறது..



செவரக்கோட்டை மதகு அணையின் வழியாக வேகமாக பாய்ந்து வரும் நீரில் வலை கட்டி கிராம மக்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களது வலையில், கெண்டை, கெழுத்தி, கட்லா, உலுவை, புளியரை பொடி

போன்ற மீன் வகைகள் வலையில் சிக்கி, கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும், பாய்ந்து வரும் நீரில் அப்பகுதி மக்கள் சறுக்கி விளையாடியும், நீந்தியும் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.


Tags

Next Story