தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
X
தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ பரவியதையடுத்து கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாளனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இவரது தந்தை இறந்துவிட்டார். தனது தந்தை பெயரில் தாளநேந்தல், மஞ்சனி கிராமங்களிலுள்ள சொத்துக்களை வாரிசு அடிப்படையில் தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி, தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்குமார் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்காக மாவிடுதி கோட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டது.

பட்டா மாறுதல் செய்ய கிராம உதவியாளர் ஜெயகோபி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செந்தில்குமார், கிராம உதவியாளரிடம் 500 ரூபாய் லஞ்சமாக கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தகவலறிந்த தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் விசாரணை நடத்தியதில், லஞ்சம் பெற்றது உண்மை என தெரியவந்ததால் கிராம உதவியாளர் ஜெயகோபியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!