காரைக்குடி நகராட்சி ஆணையாளருக்கு காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

வியாபாரத்திற்கு ஒரே இடத்தை ஒதுக்கும்படி, காரைக்குடி நகராட்சி ஆணையாளருக்கு காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி கடை போடுவதற்கு, ஆணையாளர் லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் காய்கறி கடைக்காரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தினசரி காய்கறி விற்கும் எங்களுக்கு, இரண்டு இடம் இல்லாமல் ஒரே இடத்தை ஒதுக்குங்கள்; மூக இடைவெளியுடன் வியாபாரம் செய்கிறோம் என்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், சந்தையில் வியாபாரம் செய்யும் வெளியூர் வியாபாரிகள் தினந்தோறும் சந்தையில் வியாபாரம் செய்தால் நாங்கள் என்ன செய்வது ஆகவே எங்களுக்கு இரண்டு இடம் இல்லாமல் ஒரே இடத்தை ஒதுக்கினால் நாங்கள் வியாபாரம் செய்ய பேருதவியாக இருக்கும் என்று, ஆணையாளரிடம் தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு