வேன்-பைக் மோதல்: 2 பேர் பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில் அனுமதி

வேன்-பைக் மோதல்: 2 பேர்  பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில் அனுமதி
X
தொண்டியிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்

மீன் ஏற்றி வந்த வாகனம் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில், இராமநாதபுரம்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டியிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் மீன் ஏற்றிவந்த வாகனத்தை ஓட்டி வந்த தேவகோட்டை, மாந்தோப்பு வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்த சாணான்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த கண்ணதாசன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , அருகிலிருந்தோர் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் விபத்தில் பலியானவர்கள். உடல்களை கைப்பற்றி, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!