வைகுண்ட ஏகாதசி : அரியக்குடி பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி : அரியக்குடி பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு
X

அரியக்குடியில் ஏகாதசி யை முன்னிட்டு  மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவியுடன் எழுந்தருளினார்

ஏகாதசி மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவியுடன் எழுந்தருளினார்

வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு அரியக்குடி பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டபோது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி , பூதேவி சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 6.00 மணிக்கு முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. பின்னர் ஏகாதசி மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி ,பூதேவியுடன் எழுந்தருளினார். கொரோனா பரவல் கட்டுபாடுகளால் பக்தர்கள் முக கவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Next Story
ai in future agriculture