காரைக்குடி அருகே பண மாேசடியில் ஈடுப்பட்ட இருவர் கைது; பாேலீசார் அதிரடி
சேலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் சேலத்திலிருந்து திருச்சி, கோவை, சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் 6 பேருடன் இரண்டு கார்களில் காரைக்குடிக்கு வந்துள்ளார்.
காரைக்குடி அருகே குன்றக்குடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசாரின் வாகன சோதனையின்போது காரில் 5 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மதுரை வருமானவரி துறை இயக்குனர் ஸ்டாலினிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காரைக்குடி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பணத்தின் உரிமையாளரான சேலத்தை சேர்ந்த ராஜ்குமார், தன்னிடமிருந்த 5 கோடி ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக நம்ப வைத்து, சென்னையை சேர்ந்த சூரிய கிஷோர் தன்னை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், காரைக்குடியில் இருக்கும் தனது நண்பர்களை வைத்து பணத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரிவித்தார்.
அதனடிப்படையில் ராஜ்குமாரிடம் புகாரை பெற்ற குன்றக்குடி காவல் நிலையத்தினர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ராஜ்குமாரை ஏமாற்றி அழைத்து வந்த சென்னையை சேர்ந்த சூரியகிஷோர், காரைக்குடியைச் சேர்ந்த ரோஷன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி, மற்றும் உடந்தையாக இருந்த சில நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu