நகைக்கடையில் 8 லட்சம் மதிப்புள்ள நகை திருடிய 2 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

நகைக்கடையில் 8 லட்சம் மதிப்புள்ள நகை திருடிய 2 பேர் கைது: போலீசார் நடவடிக்கை
X
கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கெனவே நகைக்கடையில் பணிபுரிந்து இடையில் வேலையைவிட்டு நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

காரைக்குடியில் தனியார் நகைக்கடையில் 8 லட்சம் மதிப்புள்ள நகை திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நூறடி சாலை வணிக வளாக மேல் மாடியில் தனியார் தங்க வியாபார நிறுவனம் இயங்கி வருகிறது. கடை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள இருபத்தி ஆறு சவரன் தங்க நகையும், ரூபாய் 60 ஆயிரம் பணமும் திருட்டு போனது. இதுகுறித்து நகைக்கடை மேலாளர் அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில்,காரைக்குடி காட்டு தலைவாசலை சேர்ந்த வீரமணிகண்டன், தேவகோட்டை ரஸ்தாவை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கெனவே நகைக்கடையில் பணிபுரிந்து இடையில் நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!