காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை
X

காரைக்குடி அருகே சருகனி ஆறு தரை பாலத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சருகனி ஆறு தரை பாலத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று அதிக அளவு மழை பெய்ததால் அனைத்து குளங்கள் , கண்மாய்கள் நிரம்பி வெளியேறி மழை நீர் வருகிறது. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் தஞ்சாவூர் - சாயல்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே பரமக்குடி ,காளையார் கோவில், இளையான்குடி, முதுகுளத்தூர் செல்லும் பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன..

Tags

Next Story