வாடகை உயர்வு: தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

வாடகை உயர்வு:  தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
X

வாடகை  உயர்வை கண்டித்து, தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

வாடகையை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சமீபத்தில் 100% வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியது.

இதனால் கடையை ஏலம் எடுத்து நடத்தும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறியும், கொரோனா காலகட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் முழுமையான கடைகள் திறக்கப்படாமல் இருந்த போதும் அதற்கான வாடகையை செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக கூறியும், நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!