30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய திருப்பாற்கடல் குளம்: கிராம மக்கள் மகிழ்ச்சி

30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய திருப்பாற்கடல் குளம்: கிராம மக்கள் மகிழ்ச்சி

30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய திருப்பாற்கடல் குளம்.

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள திருப்பாற்கடல் குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள திருப்பாற்கடல் குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தை சேர்ந்த திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் எதிரில் திருப்பாற்கடல் என்னும் கோயில் குளம் உள்ளது. இக்குளம் முழுமையாக நிரம்பி 30 வருடங்களுக்கு மேலாகிறது. பக்தர்கள் நீர் நிரப்ப வலியுறுத்தினர் கடந்தாண்டு மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் தூர் வாரப்பட்டது. மேலும் தற்போது பெய்யும் தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டதையடுத்து குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்ததால் திருப்பாற்கடல் குளம் நிரம்பி உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story