காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்

காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற  போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன் எம்பி.

காரைக்குடியில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் இருப்போரை விடுவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது

காரைக்குடியில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

உலக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 15 -ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பீமா கோரேகான் வழக்கில்15 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது..

இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


Tags

Next Story
the future of conversational ai