மின்கம்பத்தை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

மின்கம்பத்தை  தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி
X
டீ சாப்பிட வந்த இவர் டீக்கடை அருகே உள்ள இரும்பு மின்கம்பத்தை எதார்த்தமாக தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

மின்கம்பத்தை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முனியாகோயில் தெருவில் ஒர்க்ஷாப்பில் வேலை செய்யும் முத்தழகர் என்ற இளைஞர் டீ சாப்பிட வந்த பொழுது டீக்கடை அருகே உள்ள இரும்பு மின்கம்பத்தை எதார்த்தமாக தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி தெற்கு காவல் துறையினர், முத்தழகரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
what can ai do for business