காக்கிக்குள் கனிந்த ஈர மனம் : பெண்ணை காப்பாற்றிய 3 காக்கி சட்டை

காக்கிக்குள் கனிந்த ஈர மனம் : பெண்ணை  காப்பாற்றிய 3 காக்கி சட்டை
X

சாலையில் அடிபட்டு கிடக்கும் மூதாட்டி.

சாலையில் அடிப்பட்ட மூதாட்டியை 108 ஆம்புலன்சை எதிர்பார்க்காமல் அரசு பேருந்தில் ஏற்றிச் செல்ல வைத்த காவல் ஆய்வாளர்.

சாலையில் அடிபட்ட மூதாட்டியை 108 ஆம்புலன்சை எதிர்பார்க்காமல் அரசு பேருந்தில் ஏற்றிச் சென்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நூறடி சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து மோதியது.

அடிபட்ட மூதாட்டியை மருத்துவமனைக்குள் அழைத்துச்செல்லும் டிரைவர்,கண்டக்டர்.

இதில் காயமடைந்த மூதாட்டி ரோட்டில் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் மூதாட்டியை மீட்டு, 108 வாகனம் வரும் வரை காத்திருக்காமல் காயமடைந்த மூதாட்டிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அதே பேருந்தில் அனுப்பி வைத்தார். பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிய ஓட்டுனர், நடத்துனர் காயம் பட்ட மூதாட்டியை தூக்கி பேருந்தில் ஏற்றி காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டி சென்றதால் மூதாட்டி நலமானார்.

சூழ்நிலைக்கு ஏற்பட உடனடியாக செயல்பட்ட வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!