டிசம்பரில் நகராட்சி பேரூராட்சி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது: ஹெச்.ராஜா

டிசம்பரில் நகராட்சி பேரூராட்சி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது: ஹெச்.ராஜா
X
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி அகாலமரணமடைந்தது துரதிருஷ்டவசமானது

முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாது துரதிர்ஷ்டவசமானது . இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா.

இந்தியாவில் காசி முக்கிமான புனித தலமாக கருதப்படுகிறது.பிரதமர் மோடி 2014ம் ஆண்டு காசி தொகுதியில் நின்றபோது பொலிவு காட்சியாக மாற்றுவேன் என கூறியதை வரும் டிசம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றி காசியை ஒளிமிகுந்த இடமாகவும் மாற்றி நாட்டிற்கு பிரதமர் அற்பணிக்கவுள்ளார். நாட்டில் இருந்து பல முதலமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள் சமயப் பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர். இதை நாடு முழுவதும் 51000 இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடி காட்சியாக காண்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

டிசம்பர் 17ஆம் தேதி நகர்புற மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடக்கும் கூட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மேயர் கூட்டம் காசியில் நடைபெற உள்ளது. டிசம்பர் 23 ம் தேதி பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் விவசாய மந்திரிகள் உடன் களந்துரையாடல் காசியில் நடக்க உள்ளது.விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நலத் திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்காக, மாநாடு காசியில் நடக்க உள்ளது.

ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த நாளை இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது அன்றும் காசியில் இளைஞர்கள் மூலம் மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடக்க இருக்கிறது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் காசிக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்ல வேண்டும். நமது காரைக்குடிக்கும் காசிக்கும் நிறைய தொடர்பு உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் மத்திய அரசு நிதி கிடைக்காது என்றுநகர்பாலிகா சட்டத்தில் தேர்தல் நடத்தாமல் நகராட்சிக்கோ பேருராட்சிக்கோ நிதி ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. அந்தச்சட்டத்தில் உள்ளதை நான் கூறியுள்ளேன். அது எனது கருத்து அல்ல. டிசம்பரில் நகராட்சி பேரூராட்சி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மழை பாதிப்பால் சில நாட்கள் தள்ளி போகலாம். .ஆனால் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தொடர்ந்து தள்ளி போடுவது நடக்காது.

அதிமுக கட்சியின் முதிர்ச்சியின் வெளிப்பாடு என்னவென்றால் கட்சியில் எவ்வித பிரிவினையும் இன்றி முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். தற்போது அதிமுகவின் பொறுப்பாளராக ஈபிஎஸ் அவர்களும் ஒபிஎஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார் ஹெச். ராஜா.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா