போதையில் காரை பெட்ரோல் பங்க் மீது மோதிய விசிக நிர்வாகி மீது வழக்கு

போதையில் காரை  பெட்ரோல் பங்க் மீது மோதிய விசிக  நிர்வாகி  மீது வழக்கு
X

விசிக பிரமுகரால் சேதமான பெட்ரோல் விற்பனை நிலையம்

பள்ளத்தூர் போலீஸாரையும் இழிவாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்ட காட்சி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

குடிபோதையில் காரை ஓட்டி சென்று பெட்ரோல் பங்க் மீது மோதி சேதப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பள்ளத்தூரில் தீபாவளி அன்று வி.சி.க.கட்சியைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர், மோகன் ராஜ் என்பவர் குடிபோதையில் தனது காரை ஓட்டிச்சென்று பெட்ரோல் பங்க் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தினார். அதிருஷ்டவசமாக தீபாவளி அன்று பெட்ரோல் பங்க் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதன்பிற,கு மோகன்ராஜ் காரில் வந்தவர்களும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க முயன்றபோது, அங்குள்ள பெண் செவிலியர், வெளிக்காயம் இல்லை உள்காயமாக இருக்கும் எனவும், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியபோது, மேற்படி நபர் அங்கும் தகராறு செய்தாராம். தகவல் அறிந்து வந்த பள்ளத்தூர் போலீஸாரையும் இழிவாகப் பேசி அநாகரிகமாக நடந்து கொண்டாார். இந்தக் காட்சி, தற்போது வாட்ஸ் ஆப் மற்றும் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விசிக பிரமுகர் மோகன்ராஜ் மீது, தற்போது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!