தமிழ்நாட்டை பிரிப்பது என்ற செய்தி வதந்தி: ஹெச். ராஜா பேட்டி

தமிழ்நாட்டை பிரிப்பது என்ற செய்தியை பிரதமரோ உள்துறை அமைச்சரோ கூறவில்லை இந்த வதந்தி ஒன்றியம் என்று கூறுபவர்களால்தான் பரவியது என்றார் பாஜகவின் முன்னாள் தேசியசெயலர் ஹெச். ராஜா வந்தது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஹெச்.ராஜாசெய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர மத்திய நிதி அமைச்சர் சம்மதித்துள்ளார். ஆனால் தமிழக நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுத்து வருகிறார். உண்மையிலேயே திமுக அரசிற்கு மக்கள் மீது அக்கறை இருந்தால்,தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் பெட்ரோல் ,டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
எந்தவொரு தகுதியும் இல்லாதவர் தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக உள்ளார்.ஜெய்ஹிந்த் என்ற முழக்கமே தமிழ்நாட்டில் இருந்து வந்ததுதான். அதனை கொச்சைப்படுத்தி பேசுவதை முதலமைச்சர் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.தமிழக பாடநூல் நிறுவன தலைவராக லியோனியை நியமித்திருப்பது தமிழக ஒருமைப்பாட்டை குலைக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டினார் ஹெச்.ராஜா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu