தமிழக எம்.பிக்கள் குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும் : கார்த்தி சிதம்பரம்

தமிழக எம்.பிக்கள் குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும் : கார்த்தி சிதம்பரம்
X

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் 

தமிழக ஊர்தி அனுமதிக்காமல் இருப்பதற்கு சரியான விளக்கம் தராவிட்டால் எம்.பிக்கள் குடியரசு தின விழாவை புறக்கணிக்க வேண்டும்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததற்கு முறையான காரணம் கூறாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி க்கு அனுமதி மறுத்ததற்கு முறையான காரணம் கூறாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.மேலும், ஒவ்வொரு தருணத்திலும் தமிழ் கலாச்சாரத்தையும்,பாரம்பரியத்தையும் பாஜக அரசு மட்டம் தட்டுகிறது.

முதல்வரின் கடிதத்திற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால், இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர் கடுமையான முடிவெடுக்க வேண்டும். கீழடி போன்ற சரித்திர சான்றுகளையும் மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய நினைக்கிறது. ஜான்சி ராணியை முன்னிறுத்தும் மத்திய அரசு, அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னால் போராடிய வேலு நாச்சியாரை ஏன் புறந்தள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story
ai marketing future