காரைக்குடி ஆவின் விற்பனையகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் விற்பனையகத்தில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் விற்பனையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்து பொருட்களின் தரம்,விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ஆவின் பால்பண்ணை அமைந்துள்ளது. இந்த பால்பண்னையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள பால்உற்பத்தியாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால்பண்ணையின் மூலம் குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தி இரண்டு மாவட்ட நுகர்வோர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆவின் பால் நிறுவனத்தில் அதன் விரிவாக்கம், மற்றும் செயல்பாடுகள் குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, காரைக்குடி சுப்பிரமணியபுரம் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகத்தில் பால் விற்பனை,ஆவின் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வு நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu