ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் ஜல்லிகட்டு நடப்பது சந்தேகம் : அமைச்சர் ரகுபதி

ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் ஜல்லிகட்டு நடப்பது சந்தேகம் : அமைச்சர் ரகுபதி
X
7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றக் கூற்றுப்படி ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கிறோம். 2022 ல் விடுதலை செய்யப்படுவார்கள்

ஒமைக்ரான் பரவல் அதிகமானால் ஜல்லிகட்டு நடப்பது சந்தேகம்தான் என்றார் சட்டதுறை அமைச்சர் எஸ். ரகுபதி.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 49-ம் ஆண்டு அண்ணா விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு தடை விதிக்காமல் இருந்தால் மட்டுமே ஜல்லிகட்டு போட்டி நடக்கும். மாறாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடக்கம் அமல் படுத்தப்பட்டால் ஜல்லிகட்டு நடப்பசு சந்தேகம்தான். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு . தமிழகத்தில் நீட் தேர்வு விதி விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் .

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்தியஅரசு, வெளியுறவு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநரே முடிவு எடுக்கலாம் என கூறி உள்ளது . ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம் 2022 ல் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உச்சநீதி மன்றம் சென்றுள்ளது அவரது உரிமை. ஆனால், தேடுதல் வேட்டை நிறுத்தப்படவில்லை தலைமறைவாக இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம் .விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றார் அமைச்சர் ரகுபதி.

Tags

Next Story
ai in future agriculture